மது கடையை நிரந்திரமாக மூட வேண்டும் என நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவல் காரணத்தினால் முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால் ஊரடங்கு நேரத்தில் மது கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மூடப்பட்டிருக்கும் மது கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி பா.ஜ.க சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கு நகர பா.ஜ.க சார்பாக மது கடையை திறக்கும் தமிழக அரசை கண்டித்து அன்னை இந்திரா காந்தி சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொது மாவட்டச் செயலாளர் கூரம் விஸ்வநாதன், நகர பொதுச்செயலாளர் ஜீவானந்தம், நகர மேற்கு தலைவர் அதிசயம் குமார் ஆகியோர் பா.ஜ.க நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.