மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை 1ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்துக் கொண்டு வருவதால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஊரடங்கு காரணமாக பல மாநிலங்களில் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் தளர்வுகள் அறிவித்து வருகின்றன. ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறையாததால், ஜூலை 1ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார்.
இருப்பினும் சில தலைப்புகளை அறிவித்துள்ளார். அதன்படி காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் தங்களது அன்றாட பணிகளை செய்யலாம். அரசு அலுவலகங்கள் 25% பணியாளர்களுடன் இயங்கலாம். மால்கள், வணிக வளாகங்களில் உள்ள கடைகள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை 50% பணியாளர்களுடன் இயங்கலாம் உள்ளிட்ட தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.