தமிழ்நாட்டில் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்ட முதலில் இருந்து ஒவ்வொரு நாளும் புதிய புதிய உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றார். தமிழகத்தில் தற்போது வரை பல ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதைத்தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி,
- திண்டுக்கல் கலெக்டராக இருந்த விஜயலெட்சுமி, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை இணை செயலாளராக நியமனம்.
- செங்கல்பட்டு கலெக்டராக இருந்த ஜான் லூயிஸ் உள்துறை இணை செயலராக நியமனம்.
- நாமக்கல் கலெக்டராக இருந்த மேக்ராஜ், நகராட்சி நிர்வாக இணை இயக்குனராக நியமனம்.
- திருப்பூர் கலெக்டராக இருந்த விஜயகார்த்திகேயன், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக நியமனம்.
- திருவாரூர் கலெக்டராக இருந்த சாந்தா, நில நிர்வாக கூடுதல் ஆணையராக நியமனம்.
- கரூர் கலெக்டராக இருந்த பிரசாந்த் மு.வடநேரே, நிதித்துறை கூடுதல் செயலாளராக நியமனம். நியமிக்கப்பட்டுள்ளனர்.
- மீன்வளத்துறை ஆணையராக கருணாகரன் நியமனம்.
- நில சீர்த்திருத்தத்துறை இயக்குனராக ஜெயந்தி நியமனம்.
- வணிக வரித்துறை இணை ஆணையராக கற்பகம் நியமனம்.
- போக்குவரத்து துறை ஆணையராக சந்தோஷ் கே.மிஸ்ரா நியமனம்
- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக சுந்தரவள்ளி நியமனம்.
- பத்திரப் பதிவுத்துறை ஐஜியாக இருந்த ஷங்கர், தமிழ்நாடு காதி, கிராம தொழில் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமனம்.
- விவசாயிகள் நலத்துறை சிறப்புச் செயலாளராக ஆபிரகாம் நியமனம்.