நடிகை அசின் தனது மூன்று வயது மகளுக்கு கதக் நடனம் கற்றுத்தரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அசின். இதை தொடர்ந்து இவர் விஜய், அஜித், கமல், சூர்யா என பலர் டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மேலும் நடிகை அசின் கடந்த 2016-ஆம் ஆண்டு ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து இவர்களுக்கு ஆரின் என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தது . இந்நிலையில் நடிகை அசின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘3 வயது குழந்தையின் வார இறுதி கதக் பயிற்சி’ என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.