வனப்பகுதியில் இருந்து மான்கள் உணவு தேடி கிரிவலப்பாதை பகுதிக்கு வந்து செல்கின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிரிவலப்பாதை பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் மயில், குரங்கு, மான், என பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் மான்களுக்கு போதியளவு உணவு கிடைக்காததால், மிகவும் பசியில் வாடுகின்றன. இதனால் மான்கள் கூட்டமாக கிரிவலப்பாதை பகுதிக்கு வந்து செல்கிறது. இதனை அடுத்து கிரிவலப்பாதையில் வனத்துறையினர் கம்பி அமைத்து வேலி போட்டுள்ளனர்.
இதனை அடுத்து தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு சென்று தங்களால் இயன்ற காய்கறிகளை வைத்து வருகின்றனர். அந்த காய்கறிகளை மான்கள் மற்றும் பல விலங்குகள் உண்டு பசியை தீர்கின்றன. இவை அனைத்தையும் குரங்குகள் வேடிக்கை பார்க்கும் புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.