Categories
மாநில செய்திகள்

புதுச்சேரி மதுக்கடை திறப்பிற்கு…. பாஜக கருப்பு கொடி காட்டட்டும்…. அமைச்சர் கண்டனம்….!!!!

தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில்,  சில தளர்வுகளுடன் ஜூன் 21-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களில் மது கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு, கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பாஜக வினர் புதுச்சேரி மது கடை திறப்பிற்கு முதலில் கருப்புக்கொடி காட்டட்டும் என மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து எல்லா கடைகளும் திறக்கப்படும் நிலையில் தான் மதுக் கடைகளும் திறக்கப்படுகின்றன. அரசு மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நியாயம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Categories

Tech |