கார் விபத்தில் பாதிரியார்கள் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் அருகே இருக்கும் ஈதனஹள்ளி பகுதியில் பாதிரியாராக சாந்தன், தாவீது மற்றும் விக்டர் மோகன் ஆகிய மூவரும் வசித்து வருகின்றனர். இவர்களின் நண்பர் ஒருவர் சென்னையில் பாதிரியாராக பணி புரிந்து வந்துள்ளார். தற்போது உடல் நலக் குறைவால் அந்த நண்பர் காலமானார். இந்நிலையில் சாந்தன், தாவீது மற்றும் விக்டர் மோகன் ஆகிய மூவரும் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக சென்னை நோக்கி காரில் பயணித்துள்ளனர். இதனை அடுத்து சடங்குகள் முடிந்த பின்பு இரவில் தங்களது காரில் புறப்பட்டு பெங்களூருக்கு சென்று உள்ளனர். இதனை அடுத்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் ஆனது திடீரென சாலையோரம் அமைந்திருக்கும் தடுப்பு கம்பியின் மீது மோதிவிட்டாது.
இந்த விபத்தில் தாவீது மற்றும் விக்டர் மோகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த சாந்தனை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் உயிரிழந்த இருவரின் உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.