டெல்டா வகையை சார்ந்த கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் பொது முடக்கம் 4 வாரங்கள் நீட்டிக்கப்படுவது குறித்த அறிவிப்புகளை பிரதமரான போரிஸ் ஜான்சன் மக்களின் முன்பு அறிவிக்கவுள்ளார்.
இங்கிலாந்தில் டெல்டா வகையை சார்ந்த கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் ஜூன் 21-ஆம் தேதி விலக்கப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்த பொது முடக்கம், தற்போது ஜூலை 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் சினிமாத்துறை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் விருந்தோம்பல் துறையின் எதிர்ப்புகளை மீறி இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இது குறித்த அறிவிப்புகளையும் பொதுமக்கள் முன்பாக வெளியிடவுள்ளார். அப்போது போரிஸ் ஜான்சன் கொரோனா கட்டுப்பாடுகளை விலக்குவதன் மூலம் இங்கிலாந்து நாடு மீண்டும் பழைய நிலைக்கு சென்றுவிடும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் சிறிது காலம் பொது முடக்கத்தை விலக்குவதற்கு காத்திருக்க வேண்டும் என்றும் பொதுமக்களை கேட்கவும் உள்ளார்.