பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தங்கள் நாட்டிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான பயண வழித்தடத்தை உருவாக்குவது தொடர்பில் ஜோ பைடனுடன் கலந்துரையாடியுள்ளார்.
பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சரான, டோமினிக் ராப் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இருவரும் கடந்த வியாழக்கிழமை அன்று இரண்டு நாடுகளுக்கு இடையேயான பயண வழித்தடத்தை உருவாக்குவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அதில் வழித்தட திட்டத்தை செயல்படுத்துவது எப்படி? என்பது தொடர்பில் இருவரும் பேசியதாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, ஜப்பான், மற்றும் கனடா போன்ற நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட ஜி-7 கூட்டமைப்பின் 47 ஆவது மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பித்தது.
இதற்காக பிரிட்டன் வந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அதிபராக பதவியேற்ற பின் முதன் முதலாக வெளிநாட்டிற்கு பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.