Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“அவள் உயிரோட இருக்க கூடாது” வாலிபரின் கொடூர முடிவு… அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்…!!

காதலியை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் சரத்குமார் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாக அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காதலர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சரத்குமார் இரவு நேரத்தில் காதலியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தன்னை பார்க்க வருமாறு அழைத்துள்ளார். இதனையடுத்து சரத்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென அந்த இளம் பெண்ணை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அருகிலிருந்தவர்கள் உடனடியாக அந்த இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வாணியம்பாடி டவுன் காவல் துறையினர் விசாரணை நடத்தி தப்பியோடிய சரத்குமாரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது சரத்குமார் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |