தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கபடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார். எஞ்சிய மவ்வட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் ஆவின் பாலகத்தில் வேறு பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் தெரிவித்துள்ளார். ஆவின் ஒன்றியங்களில் 636பணிகள் நியமனம் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான புதிய அறிவிப்பு வரும் என்று கூறியுள்ளார்.