தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கபடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார். எஞ்சிய மவ்வட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இனிப்பு, கார வகைகள் விற்கும் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ், சேவைகளை பெற இ-சேவை மையங்கள் இயங்க அனுமதி. கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 சதவீதம் பணியாளர்களுடன் இயங்க அனுமதி. பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க, பொருளுக்கு பணம் செலுத்த ஏதுவாக அலுவலகங்களை திறக்க அனுமதி அளித்துள்ளது.