தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவிகளையும் அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்க, வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு பணிக்குழு அமைத்து பெற்றோரை இழந்த குழந்தைகளை கணக்கெடுக்க வேண்டும். குழந்தைகள் நல ஆணையத்தின் முன் குழந்தைகளை ஆஜர்படுத்த வேண்டும். குழந்தைகள் தனியார் பள்ளியில் படித்தால் கல்வி உரிமை சட்டத்தில் அதே பள்ளியில் படிக்க வழிவகை செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து பெற்றோரை இழந்து 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் எந்த குழந்தைகளுக்கு பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு எதுவும் இல்லை. மேலும் அரசுப் பணி, அரசு சார்ந்த பணி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றிய நபர்களின் குழந்தைகள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது என கூறியுள்ளது.