முன்னாள் பிரபல தடகள வீரர் மில்கா சிங்கின் மனைவி கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
இந்தியாவின் முன்னாள் தடகள வீரர் மில்கா சிங்கிற்கு கடந்த மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை சீராக இருந்ததால் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில் திடீரென்று அவருக்கு ஆக்சிஜன் அளவு குறைந்ததால் சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் ஐசியூவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவரது மனைவி நிர்மலா கவுரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் இந்திய மகளிர் வாலிபால் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்துள்ளார் . இவரது மறைவுக்கு பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் .