Categories
மாநில செய்திகள்

BREAKING: டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது… வெளியான அதிரடி உத்தரவு..!!!

நோய் கட்டுப்பாட்டு பகுதிகள், வணிக வளாகங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்ககூடாது என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது இதையடுத்து பல மாவட்டங்களில் தோற்று குறைந்த காரணத்தினால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது அதன்படி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கலாம் என்று அறிவிப்பு வெளியானது. டாஸ்மார்க் கடைகள் திறக்கப்பட்ட காரணத்தினால் எதிர்க்கட்சிகள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி நோய் கட்டுப்பாட்டு பகுதிகள், வணிக வளாகங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைக்கு வருவோர் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். டாஸ்மாக் கடைகளில் ஏராளமான வருவதை தடுக்க பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

Categories

Tech |