பாகிஸ்தான், வழங்கிய மாம்பழங்களை பல நாடுகள் பெற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பியுள்ளன.
பாகிஸ்தான் தன் மாம்பழ ராஜதந்திர நடவடிக்கைக்காக, இலங்கை, பிரான்ஸ், அமெரிக்கா கனடா, சீனா மற்றும் எகிப்து உட்பட சுமார் 32 நாடுகளுக்கு கடந்த புதன்கிழமை அன்று பெட்டியில் மாம்பழங்களை வைத்து அனுப்பியிருக்கிறது. எனினும் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அதனை திருப்பி அனுப்பிவிட்டது.
மேலும் நேபாளம், இலங்கை, எகிப்து மற்றும் கனடா போன்ற நாடுகளும் அந்த மாம்பழங்களை ஏற்கவில்லை. எனினும் இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறது. மேலும் பிரிட்டன், ஆப்கானிஸ்தான், வளைகுடா நாடுகள், துருக்கி, ஈரான், ரஷ்யா மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளுக்கும் மாம்பழங்கள் வழங்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அதிபரான இமானுவேல் மக்ரோன், பாகிஸ்தான் அனுப்பிய மாம்பழங்களை வாங்கி கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை