Categories
மாநில செய்திகள்

கொரோனா நிதிக்காக 2 பவுன் தங்க நகையை தந்த பெண்…. நெகிழவைத்த சம்பவம்….!!!!!

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தமிழகத்தில் கொரோனா பொது நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் திரட்டி வருகிறார். அவருக்கு பலரும் நிதி வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று சேலத்தில் மேட்டூர் அணையை திறக்க சென்றபோது முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, சௌமியா என்ற பெண் தனது 2 பவுன் தங்க நகையை கொரோனா நிவாரண நிதிக்காக கொடுத்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், “பேரிடர் காலத்தில் கொடையுள்ளதோடு உதவ முன் வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன் மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |