தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்ததையடுத்து தான் மதுக்கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், மதுவை விற்று தான் ஆட்சி தொடர வேண்டும் என்றால் நான் நடையை கட்டுவேன் என்ற அண்ணாவின் வார்த்தையை சுட்டிக்காட்டிய அவர், அந்த வார்த்தைகளை முதல்வர் ஸ்டாலின் கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.