Categories
கிரிக்கெட் விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : ரஷ்யாவை வீழ்த்தி…. பெல்ஜியம் அபார வெற்றி …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில்  நேற்று நடந்த போட்டியில் பெல்ஜியம் அணி ரஷ்யாவை வீழ்த்தி வெற்றி பெற்றது .

யூரோ  கோப்பை கால்பந்து தொடரில் நேற்று பின்லாந்து -டென்மார்க் அணிகள் மோதிக் கொண்டன.  ஆனால் போட்டி தொடங்கி முதல் பாதி ஆட்டம் முடிவடையும் நேரத்தில் , திடீரென்று டென்மார்க் அணி வீரரான கிறிஸ்டியன் எரிக்சன் மயங்கி விழுந்தார். இதனால் அவரை உடனடியாக  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . இந்நிலையில் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்ட கிறிஸ்டியன் கண் விழித்துவிட்டதாகவும், மேலும் அவர் சோதனைகளுக்கு  உட்படுத்தப்படுகிறார் என டேனிஷ் டென்னிஸ் கால்பந்து யூனியன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதன்பிறகு இரண்டரை மணி நேரம் கழித்து போட்டி மீண்டும் தொடங்கியது. இதில் பின்லாந்து        1-0 என்ற கணக்கில் டென்மார்கை வீழ்த்தி  வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் பெல்ஜியம்- ரஷ்யா அணிகள் மோதிக்கொண்டன. இதில் போட்டியின் தொடக்கத்திலிருந்தே பெல்ஜியம் அணி அதிரடி காட்டியது. அணியில் லுகாகு 10 வது  நிமிடத்தில் ஒரு கோலும்,  தாமஸ் முனேர் 34 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தனர். இதைத்தொடர்ந்து 2 வது பாதியில் இது 8 வது நிமிடத்தில் லுகாகு  ஒரு கோல் அடிக்க , இறுதியாக ரஷ்யாவை   3-0 கணக்கில் தோற்கடித்து  பெல்ஜியம் அணி வெற்றி பெற்றது. மேலும் மற்றொரு போட்டியில் வேல்ஸ் – சுவிட்சர்லாந்து  மோதிக்கொண்டதில் இரு அணிகளும்1-1 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவில்  முடிந்தது.

Categories

Tech |