கும்பம் ராசி அன்பர்களே.! வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவைத் தொகை வந்து சேரும். அரசாங்கத்திலிருந்து வரவேண்டிய பணம் கையில் வந்து சேரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் மன மகிழ்ச்சி ஏற்படும். செலவுகள் அதிகமாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். அதிகப்படியான உழைப்பை செலுத்த வேண்டியிருக்கும். கவனமாக பேச வேண்டும். அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டை ஏற்படும். சிலருக்கு ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
அடுத்தவர் பிரச்சனைகளில் பஞ்சாயத்து பேச வேண்டாம். பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டு வெளியிடங்களுக்கு சென்று வரவேண்டும். இன்று காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைக்கூடும். காதலில் உள்ள சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து விடும். காதல் கைகூடி திருமணத்தில் போய் முடியும். மாணவர்களுக்கு தொட்டது துலங்கும். நினைத்தது நடக்கும். கல்வியில் முன்னேற முடியும். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கை மென்மேலும் வளரும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: இளம் பச்சை மற்றும் நீலம்