Categories
உலக செய்திகள்

ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி நன்கொடை..! ஜி-7 உச்சி மாநாட்டில்… வெளியான முக்கிய தகவல்..!!

ஜி-7 நாடுகள் 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை உலகில் உள்ள ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கவிருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஜி-7 என்ற அமைப்பானது ஜெர்மனி, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு நேற்று இங்கிலாந்தில் உள்ள கார்பிஸ் பே ஹோட்டலில் தொடங்கியுள்ளது. அதற்கு முன்னதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த ஆண்டின் இறுதிக்குள் உலக மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு உலகத்தலைவர்கள் உறுதி எடுக்குமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

மேலும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், சுமார் 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை உலகில் உள்ள ஏழை நாடுகளுக்கு வழங்குவதற்கான அறிவிப்பை உலகத்தலைவர்கள் கூடிய விரைவில் வெளியிடுவார்கள் என்றும், இந்த திட்டமானது நிதி உதவி அளித்தல் மற்றும் டோஸ் பகிர்வு ஆகியவற்றின் மூலம் நிறைவேற்றப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தின் தடுப்பூசி திட்டத்தின் மூலம் அந்நாட்டில் மீதம் இருக்கும் உபரி தடுப்பூசிகளில் தேவைப்படுபவர்களுக்கு கொஞ்சத்தை பகிர்ந்து அளிக்கும் நிலையில் இங்கிலாந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மிகப்பெரிய நடவடிக்கையாக இது அமையும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே இங்கிலாந்து சுமார் 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இந்த செப்டம்பர் மாத இறுதியிலும், 9.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை அடுத்த ஆண்டுக்குள்ளும் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. உலக சுகாதார நிறுவன ஆதரவிலான கோவேக்ஸ் அமைப்பின் வாயிலாக 10 கோடி தடுப்பூசிகளில் 8% தடுப்பூசி மருந்து தேவை உள்ள நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |