இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சாணிக் காயிதம் படத்தின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் இயக்குனர் செல்வராகவன் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் நடிகர் தனுஷின் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்களை இயக்கவுள்ளார் . மேலும் இயக்குனர் செல்வராகவன் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகிவரும் சாணிக் காயிதம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
#saanikayidham pic.twitter.com/MXmdN1E0LN
— selvaraghavan (@selvaraghavan) June 11, 2021
ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் செல்வராகவன் சாணிக் காயிதம் பட லுக்கில் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் மிரட்டலான புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.