Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டால் உடலில் காந்த சக்தி ஏற்படுமா…? உடலில் கரண்டி, நாணயம் ஒட்டிகொள்ளும் மர்ம மனிதர்…!!!

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு அவரது உடலில் காந்த சக்தி உருவாகி உள்ளதாக தெரிவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் சிவாஜி சவுக்கை சேர்ந்தவர் அரவிந்த் சோனார். இவருக்கு வயது 67. இவர் முதல் தடுப்பூசி எடுத்துக் கொண்டபோது எந்தவித பிரச்சினையும் அவருக்கு ஏற்படவில்லை. இரண்டாவது தடுப்பூசி எடுத்துக் கொண்டபின் அவரது உடலில் காந்த சக்தி அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். முதலில் அவரது குடும்பத்தினர் வியர்வையில் ஒட்டிக்கொள்கிறது என்று நினைத்தார்கள். ஆனால் தொடர்ந்து இதுபோல நடக்கவே அவர் ஒரு வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இந்த வீடியோவை பார்த்த நாசிக் மாநகராட்சி மருத்துவமனை டாக்டர்கள் நேராக அவரது வீட்டிற்கே சென்று அரவிந்தின் உடம்பில் என்ன பிரச்சினை உள்ளது என்பது குறித்து பரிசோதனை பார்த்துவிட்டு சென்றனர். இதுகுறித்து டாக்டர் அசோக் கூறுகையில் அரவிந்தர் உடம்பில் நாணயங்கள், ஸ்பூன்கள் ஒட்டிக்கொள்ளும் வீடியோவை பார்த்தேன். தடுப்பூசி போட்டு கொண்டதன் விளைவாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பதை ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே கூறமுடியும்.

ஆய்வுக்கு பிறகே இது குறித்து முழுமையான முடிவுக்கு வர முடியும் என்று கூறினார். இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் காந்தசக்தி ஏற்பட்டதாக அவர் கூறியதை மும்பை தேசிய மருத்துவ கல்லூரியின் டீன் டாக்டர் டட்யாராவே லஹானே மறுத்துள்ளார். உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இது போன்ற சம்பவங்கள் நடந்ததில்லை.

தடுப்பூசி போட்டுக் கொண்டதால் இது போன்று எதுவும் நடக்காது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நாம் இந்தியாவில் கொரோனா காரணமாக பலரும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதற்கு தடுப்பூசி ஒன்று மட்டுமே தீர்வு. இதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இந்த சம்பவத்தை கருத்தில்கொண்டு மக்கள் யாரும் தடுப்பூசி போடாமல் இருக்க வேண்டாம். அனைவரும் முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.

Categories

Tech |