நாமக்கல் மாவட்டத்தில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் கணவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் செந்தில் மற்றும் அவரது மனைவி சங்கீதா வசித்து வந்துள்ளனர். அவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து கடந்த 7ஆம் தேதி வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த சங்கீதாவின் தலையில் கல்லை போட்டு செந்தில்குமார் கொலை செய்துள்ளார். இதுகுறித்து ராசிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்துள்ளனர்.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் பண தகராறு காரணமாக ஆத்திரத்தில் கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து சங்கீதாவின் அண்ணன் ராசிபுரம் காவல் நிலையத்தில் செந்திலுக்கு வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததால் சங்கீதாவை கொலை செய்துள்ளார் என தெரிவித்துள்ளார். இதனால் விசாரணையில் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் செந்தில்குமார் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அதற்கு பணம் தேவைப்பட்டதால் சங்கீதாவிடம் அடிக்கடி சண்டை போட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில் சங்கீதாவும் அவர்கள் உறவுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரத்தில் தலையில் கல்லை போட்டு கொலை செய்தேன் என செந்தில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரை ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நாமக்கல் கிளை சிறையில் அடைத்துள்ளனர்