Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சீக்கிரம் புறப்படுங்கள்…. இந்த மாவட்டத்திற்கு…. 1,500 டோஸ் தடுப்பூசிகள் வந்துருக்கு….!!

கன்னியாகுமரியில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 1500 டோஸ் தடுப்பூசிகள் வந்ததால் மீண்டும் பணி தொடங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அனைவருக்கும் தடுப்பு செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு கடந்த சில தினங்களாக பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கும் தடுப்பூசி மருந்துகள் மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்படுகின்றது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 1,500 டோஸ் கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் வந்து சேர்ந்தது.

இதனையடுத்து 1,200 டோஸ் தடுப்பூசி மருந்துகள் நாகர்கோவில் கோர்ட்டு, டதி பள்ளி, குருசடி ஆர்.சி, சர்ச் வளாகம் போன்ற மூன்று சிறப்பு முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி பணிநடைபெறுகிறது. அதேபோன்று தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரசு மருத்துவமனைக்கு 300 டோஸ் தடுப்பூசியும் அனுப்பிவைக்கப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

Categories

Tech |