மீனம் ராசி அன்பர்களே.! சிந்தனை திறன் மேலோங்கும்.
இன்று விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்களில் கவனம் தேவை. பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகிவிடும். ஆடை ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் விரிவுபடுத்த கூடிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். அவ்வப்போது சின்னச் சின்ன கோபங்கள் ஏற்படும். கலைதுறையில் அதிகப்படியான உழைப்பு இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். வருகின்ற வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவசரம் வேண்டாம் அலட்சியம் வேண்டாம். கடன் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும்.
சிந்தனைத் திறன் அதிகமாக இருக்கும். சிக்கனம் வேண்டும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். காதலில் உள்ளவர்கள் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். காதல் கைகூடி திருமணத்தில் போய் முடியும். மாணவர்களுக்கு தெளிவான சிந்தனை இருக்கும். கல்விக்காக செய்யக்கூடிய விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக வெற்றி உங்கள் பக்கம் இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பச்சை