Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறாதிங்க…. இத்தனை கடைகளுக்கு சீல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

ஊரடங்கு விதிமுறைகளை மீறி வியாபாரம் நடத்திய 15 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல் படுத்தி இருக்கின்றது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள  வாலாஜாபேட்டையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பலர் கடைகளை திறந்து வைத்திருப்பதாக நகராட்சி ஆணையர்  சதீஷ்குமாருக்கு புகார் வந்துள்ளது.

அந்தப் புகாரின்படி நகராட்சி ஆணையர் சதீஷ்குமார் தலைமையில், பொறியாளர் நடராஜன், தூய்மை பணி ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பலர் வாலாஜாபேட்டையில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி கடைகளை திறந்து வியாபாரம் நடத்தி வந்த 15 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். மேலும் கடையின் உரிமையாளருக்கு அதிகாரிகள் மொத்தம் 7 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வசூல் செய்தனர்.

Categories

Tech |