Categories
உலக செய்திகள்

1000 வருடங்கள் பழமையான கோழி முட்டை.. சேதமடையாமல் இருந்த ஆச்சர்யம்..!!

இஸ்ரேல் நாட்டில் சுமார் 1000 வருடங்கள் பழமை வாய்ந்த கோழிமுட்டை கண்டறியப்பட்டுள்ளது. 

இஸ்ரேலில் இருக்கும் யவ்னே என்ற நகரத்தில் அகழ்வராய்ச்சி பணி நடைபெற்றுள்ளது. அப்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், கழிவுநீர் தொட்டியில் ஒரு கோழி முட்டையை பார்த்துள்ளனர். அந்த முட்டையுடைய ஓட்டை ஆராய்ந்து, 1000 வருடங்கள் பழமையானது என்று கண்டுபிடித்துள்ளனர்.

அது, பல வருடங்கள் கெடாமல் அப்படியே இருந்ததால் ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். மேலும் அதனுடைய அடியில் சிறு விரிசல் உள்ளதாக கூறுகிறார்கள். இது மட்டுமல்லாமல், அந்த கழிவுநீர் தொட்டியில் பழைய காலத்தில் உபயோகப்படுத்திய பொம்மைகளும் இருந்துள்ளது.

இது தொடர்பில் லீ பெர்ரி கால் என்ற ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளதாவது, இது அரிய கண்டுபிடிப்பு. சுமார் 6000 வருடங்களுக்கு முன்பாக தென்கிழக்காசியாவில் மக்கள் கோழிகளை வளர்த்துள்ளார்கள். எனினும் பல காலம் கழித்து தான் அவர்கள் அதனை உணவாக்கியுள்ளனர்.

அந்த கால கட்டங்களில், சேவல் சண்டை போன்றவற்றிக்காக பயன்படுத்தியுள்ளனர். மேலும் அவற்றை அழகுள்ள உயிரினங்களாக கருதி, பண்டைய காலத்தில் உயிரியல் பூங்காக்களில் காட்சிக்காக வைத்துள்ளனர். மேலும் அரசர்களுக்கு பரிசாகவும் அவை அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |