Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கடனை திரும்ப செலுத்த கட்டாயப்படுத்தும் நிறுவனங்கள்…. புகார் எண்கள் அறிவிப்பு…. அரசு அதிரடி….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிதி உதவிகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன் வட்டி தொகையை திரும்ப செலுத்துவதற்கு சுய உதவி குழுக்களை கட்டாயப்படுத்தும் நிறுவனங்கள் மீது புகார் அளிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆணையர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் 044-27236348/ 9342340815 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

Categories

Tech |