Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்ட மருத்துவர்…. முதல் முறையாக குழந்தையை கையில் ஏந்திய நெகிழ்ச்சி வீடியோ….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாம் அனைவரும் நாளுக்கு நாள் சிலரை இழந்து கொண்டு தான் இருக்கிறோம். அது மிகுந்த வேதனை அளிக்கிறது. அதனைப்போலவே கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் தங்கள் குடும்பங்களை பிரிந்து நீண்ட நாட்கள் தனிமையில் இருக்கும் அவலம் ஏற்படுகிறது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்தை சேர்ந்த மருத்துவர் அர்பா சஜாதின், பிரசவம் நடந்த மறு நாளிலிருந்து மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் 10 நாட்களுக்கு மேல் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் குணமடைந்து முதல் முறையாக தனது குழந்தையை கண்ணீர் பெருக தூக்கினார். தாய்மையைப் போற்றும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |