கொரோனா தொற்று காரணமாக ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட 16- வது யூரோ கால்பந்து போட்டி இன்று தொடங்குகிறது .
கால்பந்து விளையாட்டில் உலகக் கோப்பை போட்டிக்குப் அடுத்தபடியாக , இந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) பிரபலமாக பார்க்கப்படுகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டி கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஓராண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் 16- வது ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) இன்று தொடங்க உள்ளது. இத்தாலி இங்கிலாந்து ஜெர்மனி உட்பட 11 நாடுகளில் நடக்கும் இந்தப் போட்டி இன்று முதல் ஜூலை 11- ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இத்தாலியில் ரோம் நகரில் நடக்கும் முதல் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடப்பெற்றுள்ள இத்தாலி – துருக்கி அணிகள் இன்று மோதிக் கொள்கின்றன.இந்த போட்டியை காண்பதற்காக 25 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது . இந்த போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி சிக்ஸ், சோனி டென் ஆகிய 2 சேனல்களில் இந்த போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது . அத்துடன் சோனி டென் 4 சேனலில் தமிழில் வர்ணனை செய்யப்படுகிறது.