தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அடுத்தடுத்து நீக்கப்பட்ட வந்த ஊரடங்கானது ஜூன்-7 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் தொற்று ஓரளவிற்கு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி நிலவரப்படி 12, 256 ஆக இருந்த கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் தற்போது குறைந்து வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 9,337 கட்டுப்படுத்தபட்ட பகுதிகள் இருக்கின்றன. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 3, 231 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.