பிரான்சில் ஊரடங்கினால், உணவகங்கள் அதிகமாக பாதிக்கப்பட்ட நிலையில், பிரெஞ்சு காப்பீட்டு நிறுவனம் Axa நிதியளிக்க தீர்மானித்துள்ளது.
பிரான்சின் Axa காப்பீட்டு நிறுவனமானது, 300 மில்லியன் யூரோக்கள் தொகையை சுமார் 15,000 உணவகங்களுக்கு அளிக்க முடிவெடுத்துள்ளது. அதாவது பாதிப்படைந்த உணவகங்களின் உரிமையாளர்கள் பலர், நீதிமன்றத்தில், Axa நிறுவனம் அறிவித்தது போல காப்பீட்டு தொகையை அளிக்கவில்லை.
அதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறது. எனவே பொருளாதார நெருக்கடியால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று வழக்கு தொடர்ந்தனர். இதனால் தான் அந்த நிறுவனம், இத்திட்டத்தை தற்போது அறிவித்துள்ளது. இந்நிலையில் Axa நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் Thomas Buberl கூறுகையில், தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதால் இந்த பிரச்சனை உருவானது.
இதற்காக வருத்தப்படுகிறேன். எனவே தற்போது அவர்கள் கேட்காமல், நாங்களாகவே பணம் அளிக்கிறோம். மேலும் எங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து அதில் தோல்வியடைந்தவர்களுக்கும், பணம் வழங்குகிறோம். பாதிக்கப்பட்ட உணவகங்களுக்கு, இதுபோன்ற சூழ்நிலையில் உதவ விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.