அமெரிக்காவில் 27 வயது இளைஞன் 60 வயது மூதாட்டியை காதலித்து வருவதை இணையவாசிகள் பலரும் கேலி செய்த வண்ணம் உள்ளனர்.
அமெரிக்காவில் வசித்து வரும் குரான் ( 23 ) என்னும் இளைஞன் சுமார் 416,000 பாலோவர்களை தனது டிக் டாக் பக்கத்தில் கொண்டுள்ளார். இந்நிலையில் குரான் சுமார் 60 வயது மூதாட்டி ஒருவருடன் முத்தம் கொடுத்துக் கொள்ளும் நிலையிலும், நெருங்கிய நிலையிலும் பல்வேறு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுத்து அதில் இருவருடைய காதல் குறித்த சில வரிகளையும் பதிவிட்டு டிக் டாக்-ல் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ சுமார் 3.7 மில்லியனுக்கு மேற்பட்டோரால் பார்க்கப்பட்டு இணையவாசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலரும் இருவருடைய காதல் குறித்து கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் அவருடைய முகம் பார்ப்பதற்கு சாப்பிடும் நான் போல் உள்ளதாக பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். இதற்கிடையே இணையவாசிகளின் கேள்விக்கு பதிலளித்துள்ள அந்த காதல் ஜோடி இருவருடைய இந்த டேட்டிங்கிற்கு வீட்டில் ஒப்புதல் அளிப்பார்களா என்ற கேள்விக்கு ஆம் என்று இருவரும் பதில் அளித்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக குரான் நான் எனது பெண்ணை பாதுகாப்பதாக வீடியோ ஒன்றில் பதிவு செய்துள்ளார். அதில் பலரும் கிண்டல் செய்யும் வகையில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் அவர்கள் இருவரும் இந்த டிக்டாக் வீடியோவாலயே தற்போது பிரபலமாகி வருகின்றனர்.