இந்தியாவில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையில் சிக்கிம் 75.8% ஆக உயர்ந்து முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு இரண்டாவது இடம் (51.4%) , உத்திரகாண்ட் 3வது இடம்(41.5%), கேரளா 5வது இடம் (38.8%) பிடித்துள்ளன. 2030ஆம் ஆண்டுக்குள் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என கூறப்பட்டிருந்த நிலையில், சிக்கிம், தமிழ்நாடு அசத்தியுள்ளது. பாஜக ஆளும் பல மாநிலங்கள் பின்தங்கியுள்ளன.
தமிழ்நாட்டில் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 51.4% ஆக உயர்ந்துள்ளதாக AISHE தகவல் தெரிவித்துள்ளது. நாட்டிலேயே உயர்கல்வி பயில்வோர் இன் எண்ணிக்கையில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. 2010- 2021 இல் உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை 32.9% ஆக இருந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.