Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா 500 வருஷமா..? ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பெட்டி… வெளியான ஆச்சரிய தகவல்..!!

நார்வேயில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 500 ஆண்டுகள் பழமையான தேன் மெழுகு எச்சங்கள் அடங்கிய மரப்பெட்டியை லெண்ட்பிரீன் பனிப்பாறை மலை பகுதியில் கண்டுபிடித்துள்ளனர்.

நார்வேயில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 500 ஆண்டுகள் பழமையான தேன் மெழுகு எச்சங்கள் அடங்கிய மரப்பெட்டியை லெண்ட்பிரீன் பனிப்பாறை மலை பகுதியில் கண்டெடுத்துள்ளனர். நார்வே தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் மூடியுடன் கண்டெடுக்கப்பட்ட இந்த மரப்பெட்டியானது ஆச்சரியங்களை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. அதாவது கலாச்சார வரலாற்று அருங்காட்சியகம் மேற்கொண்ட ஆய்வில் இந்த பெட்டியில் உள்ள சில மெழுகு எச்சங்கள் தேன் மெழுகு என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த பெட்டி கி.பி 1475-1635-ஆம் ஆண்டிற்கு முந்தைய காலத்தை சேர்ந்தது என்பதும், இந்த மரப்பெட்டி ரேடியோ கார்பன் டேட்டிங் மூலம் பைன்வுட்டால் செய்யப்பட்டுள்ளது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கலாச்சார வரலாற்று அருங்காட்சியகம் மேற்கொண்ட ஆய்வு குறித்து சீக்ரெட்ஸ் ஆஃப் தி ஐஸ்-ன் பேஸ்புக் பக்கத்தில் இன்லாண்டெட் கவுண்டியின் பனிப்பாறை தொல்பொருள் திட்டம் பதிவு வெளியிட்டுள்ளது.

மேலும் இன்லாண்டெட்டில் உள்ள பனிப்பாறை தொல்பொருள் திட்டத்துடன் தொடர்புடைய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்ட இந்த மரப்பெட்டியானது ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்த்ததைவிட மிகவும் பழமையான ஒன்றாக இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நார்வேயின் ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின் கலாச்சார வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் இன்லாண்டெட் கவுண்டி கவுன்சில் ஆகியவற்றிற்கு இடையேயான தொல்லியல் ஆராய்ச்சிக்கான இந்த திட்டத்தில் லெண்ட்பிரீன் பனிப்பாறை உருகும்போது கடந்த 2011-ஆம் ஆண்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

மேலும் 1970 மற்றும் 1980-ல் பல கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் ஆராய்ச்சியாளர்கள் சுமார் 1900 மீட்டருக்கு குறிப்பிட்ட பகுதியை தேர்ந்தெடுத்து இந்த ஆராய்ச்சியை தொடங்கியுள்ளனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் பனிப்பொழிவு மிக்க மலைகளில் கலைமான் வேட்டையாடுவதை குறிக்கும் குச்சிகள், வைக்கிங் காலத்தைச் சேர்ந்த ஈட்டிகள், பனிக்கட்டிகளின் புதைக்கப்பட்ட கண்கவர் பொருட்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் குதிரை சாணமும் அந்த பனியில் இருந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் கல்லால் கட்டப்பட்ட சுவாரஸ்யமான தங்கும் இடங்களும், இடிபாடுகளும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Categories

Tech |