Categories
உலக செய்திகள்

ரொம்ப மோசமா பேசிட்டாரு..! டி.வி நேரலையில் நடந்த கைகலப்பு… வைரலாகும் வீடியோ காட்சி..!!

பாகிஸ்தானில் அரசியல் கட்சி தலைவர்கள் இருவர் டி.வி நேரலையின் போது கைகலப்பில் ஈடுபட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாகிஸ்தான் பீபுள் கட்சியை ( PPP ) சேர்ந்த கிட்டிற் கான் மண்டோக்ஹெல் மற்றும் பாகிஸ்தானை ஆளும் பாகிஸ்தான் டெஹரீக்-ஏ-இன்சப் ( PTI ) கட்சியின் மூத்த உறுப்பினரான பிரடோஸ் ஆஷிக் அவன் ஆகிய இருவரும் “ஊழல்” என்ற தலைப்பில் பாகிஸ்தானில் உள்ள பிரபல டி.வி சேனல் ஒன்றில் நேரலையில் விவாதித்து கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஒருவரை ஒருவர் மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இந்த தகராறு நடந்து கொண்டிருக்கும் போதே மண்டோக்ஹெல்-ன் சட்டை காலரை பிடித்த அவன் அவரை கன்னத்தில் பளார் என்று அறைந்துள்ளார். இதையடுத்து அவன்-ஐ மண்டோக்ஹெல் தள்ளி விட்டுள்ளார். அப்போது அரங்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக வந்து அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த தகராறை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

டி.வி நேரலையில் போது அரசியல் தலைவர்களுக்கு இடையே நடந்த இந்த கைகலப்பு வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட அவன், மண்டோக்ஹெல் தன்னையும் தனது தந்தையையும் தகாத வார்த்தையில் திட்டியதால் தன்னை தற்காத்துக் கொள்ளவே அவரை தாக்கியதாக தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக மண்டோக்ஹெல் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |