Categories
மாநில செய்திகள்

BREAKING: 2023 வரை பணி நீட்டிப்பு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தரம் உயர்த்தப்பட்ட 19 உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 95 ஆசிரியர்களுக்கு 2023 வரை பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட 19 உயர்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 95 ஆசிரியர்களுக்கு 2023 வரை பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கடந்த 2016 – 17 ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் 19 நடுநிலைப்பள்ளிகளை அரசு உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், அவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு, ஒவ்வொரு பள்ளிக்கும் 5 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 95 பட்டதாரி ஆசிரியர்களை தற்காலிகமாக பணியாற்ற அறிவித்திருந்தது.

இதையடுத்து கடந்த 2018 முதல் 2020 வரை 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டிருந்தது. தற்போது அந்த பணி நீட்டிப்பு வரும் 31.12.2020 உடன் முடிவடைந்த காரணத்தினால், தற்போது மேலும் 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்குமாறு பள்ளி கல்வி இயக்குனர் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதனை பரிசீலனை செய்த பள்ளிக்கல்வித்துறை 19 உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 95 ஆசிரியர்களுக்கு 2023 ஆம் ஆண்டு டிசம்பர் வரை பணி நீட்டிப்பு வழங்கி அரசாணையை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |