Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பலமாக வீசிய சூறைக்காற்று… கட்டி வைத்தும் பயனில்லை… சோகத்தில் மூழ்கிய விவசாயிகள்…!!

சூறை காற்றில் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் 50 ஆண்டுகள் பழமையான மரம் மற்றும் தோட்டத்தில் இருக்கும் தென்னை மரம் போன்றவை பலத்த சூறைக் காற்றினை தாக்கு பிடிக்காமல் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளது.

இந்நிலையில் தாந்தோணி பகுதியில் பலத்த சூறைக் காற்று வீசியதனால் அந்த வாழை மரத்தை பாதுகாப்பதிற்காக  குச்சியின் துணையோடு மரத்தை சேர்த்து இருக்கி கட்டி வைத்துள்ளனர். ஆனால் காற்று பலமாக வீசியதனால் அனைத்தும் வாழைமரமும் இரண்டாக முறிந்து விழுந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Categories

Tech |