வள்ளியூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த 200 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவையான மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோன்று தக்கலை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையிலும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோன்று பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் நோயாளிகள் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இந்த மாவட்டத்திற்கு சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு நெல்லை மாவட்டத்திலுள்ள வள்ளியூரில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்டு தேவைப்படும் மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றது. இந்நிலையில் வள்ளியூரில் இருந்து சுமார் 200 ஆக்சிஜன் நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் டெம்போகள் மூலம் நாகர்கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது.
இதனை அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அலுவலகத்தில் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொண்டுவரப்பட்ட ஆக்சிஜன் தேவைப்படும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. இதனையடுத்து அதிகமான ஆக்சிஜன் சிலிண்டர்கள் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. ஆனால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் நிரப்பகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.