இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான, 2 வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று நடைபெறுகிறது.
இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான, முதல் டெஸ்ட் போட்டி’ டிரா’ ஆன நிலையில், இன்று 2வது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. இந்த போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு இடது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக , அவர் இந்த 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார்.
இந்தியாவுக்கு எதிராக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை, கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளார் . வில்லியம்சன் விலகியதால் அணியின் துணை கேப்டனான டாம் லாதம், இந்த தொடரில் கேப்டனாக பொறுப்பு ஏற்பார் என்றும் , வில்லியம்சனுக்கு பதில் வில் யங் களமிறங்குவார் என்று தெரிவித்துள்ளனர் . இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.