Categories
தேசிய செய்திகள்

”பாஜக மீது தீய சக்தி ஏவினார்கள்” காங்கிரஸ் கண்டனம்…!!

பாஜக மீது எதிர் கட்சிகள் தீய சக்தியை ஏவி விட்டுள்ளதாக போபால் MP கூறியதற்கு காங்கிரஸ் கட்சியின் ஜோதிராதித்ய சிந்தியா விமர்சனம் செய்துள்ளார்.

கடந்த ஒரு ஆண்டில் பாஜகவின் முக்கிய , மூத்த தலைவர்கள் மரணமடைந்துள்ளனர்.  குறிப்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் , மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர் , சுஷ்மா ஸ்வராஜ் , அருண் ஜெட்லி ஆகிய முக்கிய தலைவர்கள் இறந்துள்ளனர்.பாஜகவின் அடுத்தடுத்து மரணங்கள் குறித்து  போபால் பாஜக எம்பி பிரக்யாசிங் தாகூர் கூறியது சர்சையை ஏற்படுத்தியது. அதில்,  பாஜகவின் தலைவர்கள் மரணமடைவதற்கு காரணம் எதிர்க்கட்சிகள் பாஜகவின் மீது தீய சக்தியை ஏவி விட்டுள்ளதாக சாது ஒருவர் எனக்கு எச்சரிக்கை விடுத்தாக கூறினார். இதுக்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் பிரக்யாவின் கருத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னால் பொதுச் செயலாளர் ஜோதிராதித்ய சிந்தியா கடுமையான  விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதில்பொறுப்பான பதவியில் இருப்பவர் இப்படி பேசுவது வருத்தம் அளிக்கின்றது. இப்படி பேசுபவர்களை  அரசியலுக்கு கொண்டு வருவதற்கு முன் பாஜக சிந்தித்திருக்க வேண்டும். அரசியலுக்கென்று தரம் இருக்கின்றது. இப்படி பேசி தனது தரத்தையும் , அரசியலின் தரத்தையும் குறைப்பவர்களை கடுமையாக கண்டிக்க வேண்டுமென்று   அவர் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |