Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிறைமாத கர்ப்பிணி பெண் உள்பட 3 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆலத்தூர் அருகே நிறைமாத கர்ப்பிணியை இயற்றி வந்த அவசர ஊர்தி டயர் வெடித்து சாலையோர புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அந்தக் கோர விபத்தில் நிறைமாத கர்ப்பிணி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கண்ணன் என்பவரது மனைவி தான் ஜெயலட்சுமி. அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் இவரை பிரசவத்திற்காக 108 அவசர ஊர்தியில் அழைத்துக் கொண்டு அவரது மாமியார், அவரது நாத்தநார் ஆகிய மூவரும் புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதன்கிழமை அதிகாலை அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அனுப்பி வைத்தனர். அவசர ஊர்தியை ஆரூர் குப்பன் என்பவரின் மகன் கலியமூர்த்தி ஓட்டி வந்துள்ளார்.

இவருடன் மூங்கில்துறைப்பட்டு திருமலை மகள் உதவியாளர் தேன்மொழி, புதுப்பட்டு கிராம செவிலியர் மீனா ஆகியோர் வந்துள்ளனர். அவசர ஊர்தி ஆலத்தூர் அருகே சென்றபோது திடீரென டயர் வெடித்து சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அந்த கோர விபத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் மாமியார் செல்வி, நாத்தனார் அம்பிகா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்ப்பிணி பெண் ஜெயலஷ்மி உடனே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் கூறினார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |