Categories
உலக செய்திகள்

அந்த பொண்ணு இப்படி தான் இருக்கும்..! காணாமல் போன சிறுமி… தகவல் வெளியிட்ட காவல்துறையினர்..!!

லண்டனில் கடந்த 7-ஆம் தேதி மாயமான 15 வயது சிறுமி குறித்த முக்கிய தகவல்களை காவல்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

தெற்கு லண்டனில் வசித்து வந்த ஹோலி கவுகன் ( 15 ) என்ற சிறுமி கடந்த திங்கட்கிழமை அன்று காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறையினர் அந்த சிறுமியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சிறுமி குறித்த முக்கிய தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில் ஹோலி கவுகன் கடந்த 2006-ஆம் ஆண்டு பிறந்ததாகவும், சிறுமி மாயமான அன்று கருப்பு நிற மேல் சட்டையும், நீல நிற ஜீன்ஸ் பேண்ட்-ம் அணிந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் ஹோலி 5 அடி 3 அங்குலம் உயரமும், மெல்லிய உடல் தோற்றமும் கொண்டிருப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறையினர் சிறுமி குறித்து தகவல் ஏதேனும் தெரிய வந்தால் உடனடியாக காவல் நிலையத்தில் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Categories

Tech |