பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி மீது நடிகர் விஷால் புகார் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், வினியோகஸ்தருமாக வலம் வரும் ஆர்.பி.சவுத்ரி பல படங்களுக்கு பைனான்ஸும் செய்து வருகிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷாலும் இவரிடம் கடன் பெற்று அதன் பிறகு அக்கடனை கடந்த பிப்ரவரி மாதம் முறையாக செலுத்தியுள்ளார்.
ஆனால் அவர் கடன் பெற்ற போது விஷால் தரப்பில் கையொப்பமிட்டு அளிக்கப்பட்ட பத்திரங்களை இதுவரை ஆர்.பி.சவுத்ரி தரப்பு திருப்பி அளிக்கவில்லை. இதுபற்றி அவரிடம் கேட்டபோது செக் மற்றும் அனைத்து பேப்பர்களும் தொலைந்து விட்டதாக ஆர்பி சவுத்ரி கூறியுள்ளார். இதனால் நடிகர் விஷால் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர்.