தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால்மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிதி உதவிகளை வழங்கி வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதத்திற்கான மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது.
மேலும் ஊழியர்கள் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மின் அளவீடு செய்யாமல் நுகர்வோர்கள் ஆன்லைன் மூலம் கணக்கீடு அளவை தெரிவிக்கலாம் எனவும் இன் மையம் தெரிவித்தது. அதன்படி தற்போது மே 10ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளவர்கள், ஜூன் 15ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.