கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி நிரந்தர தீர்வு என்பதால் தடுப்பூசி செலுத்துவதில் மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி வினியோகத்தை மத்திய அரசே ஏற்கும் என்றும் அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வினியோகம் செய்யப்படும் என்றும், ஜூன் 21ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகளுக்கான விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது .அதன்படி கோவிஷீயீல்டு ரூ.780, கோவாக்சின் ரூ.1,410, ஸ்புட்னிக் ரூ.1,145 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று தீவிரம், தடுப்பூசி போடும் பணியில் உள்ள முன்னேற்றம் மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.