Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

2 வாரத்திற்கு பிறகு …. இவ்வளவு ரூபாய்க்கு விற்பனை…. வியாபாரிகளின் கோரிக்கை….!!

தோவாளையில் 2 வாரத்திற்குப் பிறகு பூக்கள் விற்றதால் விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள பூ மார்க்கெட்டிலிருந்து பூக்களை கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைப்பது ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் விற்பதற்காக வந்த பூக்களில் ஏராளமானவை தேக்கம் அடைந்ததால் வியாபாரிகள் கவலை அடைந்தனர். எனவே விவசாயிகள் அவர்கள் விளைநிலங்களில் இருக்கும் பூக்களை பறிக்காமல் செடிகளில் விட்டு விட்டனர். இதனையடுத்து பொது மக்களின் தேவைக்காக ஒரு சில இடங்களில் வியாபாரிகள் பூக்களை சமூக இடைவெளியுடன் அவரவர் வீடுகளில் வைத்து விற்பனை செய்துள்ளனர். இந்நிலையில் அரசு தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவித்து நடைபாதைகளில் பூக்கடைகள் நடத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

அதன்படி பூக்களை நடைபாதையில் பூ மார்க்கெட் வைத்து சமூக இடைவெளியை கடைபிடித்து  விற்பனை செய்ததால் வியாபாரிகள்  மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இவ்வாறு ஒரு கிலோ பிச்சிப்பூ 600 ரூபாய், அரலி 100 ரூபாய், முல்லை 600 ரூபாய், 150 ரூபாய் மல்லிகை, 30 ரூபாய் சம்பங்கி, 200 ரூபாய் கனகாம்பரம், 20 ரூபாய் துளசி, 30 ரூபாய் வாடாமல்லி, தாமரை 200 ரூபாய் என வியாபாரிகள் விற்பனை செய்துள்ளனர். மேலும் கோழிப்பூ 40 ரூபாய், ரோஸ் பாக்கெட் 15 ரூபாய், பச்சை 6 ரூபாய், 100 ரூபாய் பட்டன் ரோஸ், 150 ரூபாய் ஸ்டம்புரோஸ், 40 ரூபாய் மஞ்சள் கிரேந்தி, 50 ரூபாய் சிவப்புக் கேந்தி, 100 ரூபாய் மஞ்சள் சிவந்தி, வெள்ளை சிவந்தி 100 ரூபாய், 70 ரூபாய் கொழுந்து, 80 ரூபாய் மருக்கொழுந்து என வியாபாரிகள் விற்பனை செய்துள்ளனர்.

இதுகுறித்து பூ வியாபாரி கிருஷ்ணகுமார் கூறியபோது மாவட்டத்தில் 5 டன் பூக்கள் பூ மார்க்கெட்டுக்கு வந்து கேரளாவுக்கு அனுப்ப முடியாமல் இருந்தாலும் மார்த்தாண்டம், களியக்காவிளை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் இருக்கக்கூடிய வியாபாரிகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டது. எனவே அரசு விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி அடைக்கப்பட்டுள்ள பூமார்க்கெட் உடனடியாக திறப்பதற்கு வியாபாரிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று கிருஷ்ணகுமார் கூறியுள்ளார்

Categories

Tech |