ஊரடங்கு காலத்தில் அதிகளவு நஷ்டம் ஏற்பட்டதால் விவசாயி ஒருவர் காய்கறி விற்பனையை நிறுத்திவிட்டார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் பகுதியில் ஏக்கர்கணக்கான நிலப்பரப்பில் விவசாயிகள் தோட்டப்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதி விவசாயிகள் ரசாயன உரங்கள் இல்லாமல் புடலை, பாகல், தக்காளி, வெள்ளரி, தர்பூசணி, பீர்க்கங்காய், கத்திரி, வெண்டை போன்ற காய்கறிகளை சாகுபடி செய்து வந்தனர். இந்நிலையில் வேட்டங்குடி பகுதியை சேர்ந்த விவசாயி நந்தீஸ்வரன் தோட்டக்கலை துறையின் மூலம் விதைகள் வாங்கி சாகுபடி செய்துவந்தார். இவை இயற்கையாக பயிரிட்டு ரசாயனம் இல்லாமல் விளைந்து வந்த காய்கறி என்பதால் சுவை மாறாமல் இருக்கும். எனவே இந்த காய்கறிகளை மக்கள் அனைவரும் விரும்பி வாங்கி சென்றனர்.
பின்னர் கொரோனா ஊரடங்கால் வியாபாரம் இல்லாத நிலையில் காய்கறிகள் செடியிலேயே அழுகி விடுகிறது. மேலும் இதனை விரும்பி வாங்கி செல்லும் வியாபாரிகளும் வராததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆண்டுதோறும் 1 லட்ச ரூபாய்க்கு மேல் லாபம் இருந்த நிலை மாறி அனைத்து காய்கறிகளும் செடியிலேயே அழகிவிட்டதால் முழு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா அச்சம் காரணமாக வெளியில் சென்று காய்கறிகளை விற்று வருவதாலும் கொரோனா தொற்று பயத்தை ஏற்படுத்துகிறது. எனவே காய்கறிகளை விற்பனை செய்வதை விவசாயி நிறுத்திவிட்டார்.