லிப்ட் படம் குறித்து லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்தர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் கவின். இதை தொடர்ந்து இவர் நட்புனா என்னனு தெரியுமா, சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இயக்குனர் வினித் வரப்பிரஸாத் இயக்கத்தில் உருவாகியுள்ள லிப்ட் படத்தில் கவின் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் பிகில் பட நடிகை அமிர்தா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். எக்கா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற இன்னா மயிலு பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
Happy and extremely satisfied yet again for the movie lift.perfect seat edge horror thriller and ultimate treat for kavin fans.200% no disappointment. Theatre motivated movie.director vineet nailed it.good luck team can't wait as distrbutor.#therikavittaplakavin
— LIBRA Productions (@LIBRAProduc) June 8, 2021
இந்நிலையில் லிப்ட் படத்தை வெளியிட உள்ள லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘இந்த படத்தை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கிறது. லிப்ட் சீட் எஜ் ஹாரர் த்ரில்லர் திரைப்படம் . கவின் ரசிகர்களுக்கு இந்த படம் சிறந்த விருந்தாக அமையும். 200% ஏமாற்றம் இல்லை. படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த படத்தை வெளியிடுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார் . தற்போது அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.